Skip to main content

Posts

கஜா - கவிதை

___ கஜா ___ சீற்றம் குறைகிறது மாற்றம் தெரிகிறது வேண்டும் என்கிறது மழலை குரல் வேண்டாம் என்கிறது அனுபவ குரல் இது காற்று நடத்தும் மாநாடு நடுங்கி நிற்கிறது குடிசை வீடு நிறைவேற போவது என்ன தீர்மானமோ ? பூமிக்கு வரப் போவது அழிமானமோ ? நீ தென்றலாய் வந்தாய் ரசித்தோம் புயலாய் வருகிறாய் ஒரு நிமிடம் திகைத்தோம் உன் வேகத்தை கொஞ்சம் குறை துணைக்கு மேகத்தை கொஞ்சம் அழை உன் போர் குணம் பார்த்து நாங்கள் அழும் முன் வானம் அழட்டும் பூமி உன்னை தொழட்டும் கஜாவே சீற்றம் ஒழி களங்கம் அழி வா மழையாக மலர் தூவி வரவேற்போம் உன்னை நீ தான் காக்க வேண்டும் இந்த மண்ணை

சீனாவின் மூங்கில் செடி

Chinese bamboo பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.  நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ? ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் ச

அன்புதான் இறைவன்

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?" தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜ ராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது "உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது" என்பதே அவர் கேள்வி.?? மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை" அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய "பொருள்" அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ, அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு, என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து,  "மகிழ்ச்சியை தரும் பொருட்கள்" எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு , ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், "மன்னர் ராஜராஜ சோழர்" கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். "மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது" ஒவ்வொரு "பொருட்களாக" அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். * முதலில், சிறிய அளவு "பொன்" இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்க

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼 ஒரு பையனும்🙋🏻‍♂ காதலித்து வந்தனர் ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றி. பேசினர் பெண் சொன்னாள் நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள் அதற்கு அந்த பையன் சொன்னான்... நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .? உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்......... விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்......... பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்.......... அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்....... மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான் திருமணத்தை பதிவு செய்தார்கள்.....

கண்ணீரின் கதை

#கண்ணீரின் கதை நாம் சிரிக்கும்போது எவ்வளவு கலோரிகள் செலவு செய்யப்படுகின்றனவோ அதே அளவு கலோரிகள் நாம் அழும்போதும் நம் உடலிலிருந்து செலவு செய்யப்படுகின்றன. அழுகையை அடக்குவதால் ஹார்மோன் பிரச்ச்னைகள் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். நம் கண்ணீர் பார்ப்பதற்கு(!) ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் 3 வகைகள் இருக்கின்றன. *Basal tears – அடிப்படை கண்ணீர் நம் கண்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகிறது. *Reflexive tears – எதிர்வினைக் கண்ணீர் கண்களில் தூசு விழும்போது, வெங்காயம் நறுக்கும்போது, இருமும்போதும், தும்மும்போதும் வரும் கண்ணீர். *Psych tears – உணர்வுசார் கண்ணீர் பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே.. கோபம், மன அழுத்தம், பயம், துக்கம் இவை மட்டுமல்ல..அளவுகடந்த சந்தோஷத்தாலும் வரும் கண்ணீர். இந்த வகைக் கண்ணீர், மன அழுத்தத்தாலும் கவலையினாலும் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அழுதுமுடித்தவுடன் புத்துணர்ச்சியுடனும் லேசான மனதுடனும் இருக்க இதுவே காரணம்.

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம்

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்). “அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”. கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை. சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்க

கலைவாணர் N.S.கிருஷ்ணன் - “மை“

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.   “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட  மையை  தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?  சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.  இவற்றையெல்லாம்  அரு“மை“யான  எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.  “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.  கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“  என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“ யாகவும், உரி“மை“ யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார். கூட்டத்தில் உற்