Skip to main content

Posts

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை.. பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது, தன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமாக இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்.. அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியது தானே? என்றார். ஷா, "தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை" என்றார். சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார். மாடியில் தங்கியிருந்த ஷா வைப் பார்க்க படியேறிவந்தார். ஷா வைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார். அதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார். டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் க

100 பத்துரூபாய்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை.. ஒருவர் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்கிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்..) கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து.. ஒரே ஒரு பத்துரூபாய் நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்தது பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு கிடந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு 'இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து மிகவும் சந்தோஷமடைகிறான் அந்த பத்து ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காபி ஒன்பது ரூபாய்க்கு (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயை போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான். மீதி 99 பத்துரூபாய்

அன்பினால் சிறுவனும் பசுவும்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை.. பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.  அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்.. தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை. அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையு

எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை.. கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!” மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!” நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!” இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..! கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..! பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!” ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..! “ மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?” கடவுள் அந்த ஒன்பது பேரிட

மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை.. சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்.. அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, உனக்கு ஒரு பெரிய சவால் அதில் வெற்றி பெற்றால், நீ தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகிவிடுவாய்.. இன்று இரவு முழுவதும்.. நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும்.. உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ பயப்படக்கூடாது.. வீட்டிற்கு ஓடி வந்து விடவும் கூடாது என்றார்.. சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.. அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்.. பிறகு, தந்தை திரும்பிச்செல்லும்  காலடி ஓசை, மெல்ல, மெல்ல மறைந்தது.. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு.. தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது.. காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ, என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.. மரங்கள் பேயாட்டம் ஆடின.. மழை வேறு தூறத் தொடங்கியது.. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.. ‘’அய்யோ ! இப்படி அனாதையாக தவிக்க வி

அப்பா எழுதுவது

#படித்ததில்மனதைத்தொட்ட_பதிவு ... பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். ""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?'' ""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?'' அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார். ""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.'' பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான். அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்த

ஏளனமாக பார்ப்பதும்.. பேசுவதும் தவறு..!!

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை.. ஒரு முதியவர் ஒருவர்.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்.. வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது.. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்.. "தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை.." என்று.. அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றார்.. பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."? சர்வர் கோபமாக "யோவ்.. ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க.. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்று.. பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.. வெளியே வெயில் வேறு.. அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்.." என்றார்.. சர்வர்.. "சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..!" என்று.. பெரியவர்.. "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது.." என்றார்.. சர்வர்.. "சரி.. தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..?" பெரியவர் 'சரி&#