Skip to main content

Posts

Showing posts from June, 2021

கழுதையோட அட்ஜஸ்ட்

ஒரு ஊரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார். ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். சில நாட்கள், அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்...  சில நாட்கள், மேற்கு, வடக்கு... இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் சிலர்,  ஒரு நாள், வணிகரை நிறுத்தி, " என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு..? " என்றனர். " முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை... அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், க

திண்ணை

  உண்மையைச் சொன்னால் திண்ணை வைத்துக் கட்டப்படும் வீடுகளில்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். திண்ணைகளோடு வாழ்ந்து பழகினவங்களுக்கு திண்ணையில்லா வீடெல்லாம் கான்கிரீட் கல்லறைகள்தான்! அன்னைப்பேச்சு அரும்பேச்சு.. முன்னைப் பேச்சு முறிஞ்சாச்சு... மொன்னைப் பேச்சு ஆனாலும் திண்ணைப் பேச்சு தேன்பேச்சு! ஒன்னு தெரியுமா உங்களுக்கு? உலகத்திலேயே உறங்குவதற்கு சிறந்த இடம் திண்ணைதான்! திண்ணையில ஓரத்திலேயோ அல்லது முகப்பிலேயோ ஒரு திண்டு அல்லது சற்று மேடான ஒருபகுதி இருக்கும். வாட்டசாட்டமா நல்லா முதுக சாய்ச்சுக்கிடுறதுக்கும் தேவைப்பட்டா கைய தலைக்கு குடுத்து சரிஞ்சுக்கிடுறதுக்கும் திண்ணையோட சுகமே சுகம்தான்! தமிழ்நாட்டு கல்விக்கும் திண்ணைக்குமே பெரிய சம்மந்தம் இருக்கு! பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சதே திண்ணையிலதானே! காத்து வாங்குறதுக்கு காதல் வாங்குறதுக்கு திண்ணைய விட சிறந்த இடம் இருக்கவே முடியாது. எதிர் திண்ணையில் இருந்து வாசல் தெளிக்கும் போது வர்ற வளையல் சப்தம். வேணுங்காட்டிக்கே தெருவுல வர்றது யாருன்னு பாக்குறதுக்காகவே திண்ணைக்கு வந்து போகிற கொலுசு சப்தம். காய் வியாபாரிக்கிட்ட பேரம் பேசுற சாக்குல திண்ணையோர தூண்களில்