Skip to main content

Posts

Showing posts from March, 2021

#நண்பனா? #எதிரியா? முடிவு செய்...

#நண்பனா? #எதிரியா? முடிவு செய்...  அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.  அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.  இதனால் கலக்கமுற்ற விவசாயி  தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.  வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.  செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.  ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.  இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.  வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால ம

5 கோடி ரூபாய் மரங்களை பற்றிய அறியதகவல்

  🌳 # மரங்களை _ பற்றிய _ அறியதகவல் 🌳 🌳 1. போதி மரம் என்பது அரச மரம் . 🌳 2. அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும் . 🌳 3. இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் . 🌳 4. அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி . 🌳 5. நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம் . 🌳 6. வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது . 🌳 7. வாகை மரத் தழை வாயு போக்கும் . 🌳 8. மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம் . 🌳 9. பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது . 🌳 10. மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது . மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான் ., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய் ., மூன்று சிலிண்டரின்விலை 2100 ரூபாய் ., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது ., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது ., இவ்வளவு விலையுயர்ந்த , மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள்

கணவர்கள் விற்கப்படும் கடை

அமெரிக்காவில் ஒரு ஊரில் , கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது ........ அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது . அதில் எழுதியிருந்தது .. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம் . கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன . ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும் . ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது .. அப்படியே வெளியே தான் போக வேண்டும் ... இது தான் அந்த விதிமுறைகள் ... இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு , ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார் .. " கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே , என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார் ... முதல் தளம் அறிக்கை பலகையில் , இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் " வேலை உள்ளவர்கள் ". " கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ". இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார் ... இரண்டாம் தளம் அறிக்கை பலகையில் , இந்த தளத்தில் இருக்கும