Skip to main content

Posts

Showing posts from January, 2021

எல்லாம் நன்மைக்கே

எல்லாம் நன்மைக்கே  ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.  வழக்கம் போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.  அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல

எலியின் பசி

எலியின் பசி  ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம். . . அது ரொம்ப நாள் பட்டினியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம். அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சு. . . கஷ்டப்பட்டு உள்ளே நுழைஞ்சுதாம். அங்கு சோளம் இருந்துச்சாம். ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட்டு எலி குண்டாயிடுச்சு. எலி வெளியே வர பார்த்துச்சு. . . . . . அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சு பாவம். நீதி : பேராசை இருத்தல் கூடாது.

தானத்தில் சிறந்த கர்ணன்

தானத்தில் சிறந்த கர்ணன்  பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.  பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப் பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் தருமர்.  உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னு