Skip to main content

நெசவாளியின் ஆசாத்தியா திறமை

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.
பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின்
வீட்டில் தங்கினான்......!!

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!!
யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என
நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!!

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது ,
நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!! அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!! அரசன் அந்த நெசவாளியிடம் "இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!!

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!! குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’
என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது...... ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!!

‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!! இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!! இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!!

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!! ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.....!!

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க, இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.....!!

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.....!! நெசவாளியைப் பார்த்து, ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது.......!! அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்..... !!

அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்......!!!

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்.....? உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன்.....!!

அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது....!! ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.....!!! என்னிடம் பாடம் கேட்கும்போது, அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......!!!

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா...?? என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....!!!

நெசவாளி சொன்னான்: ‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்....,!! வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...!!!

ஒருவன் விரும்பினால், ஒரே நேரத்தில், கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி....!!

நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... !!
தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....!!
உழைப்பே உயர்வினை தரும்.....!!

அதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்.

Comments

Popular posts from this blog

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை: ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ எ

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼 ஒரு பையனும்🙋🏻‍♂ காதலித்து வந்தனர் ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றி. பேசினர் பெண் சொன்னாள் நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள் அதற்கு அந்த பையன் சொன்னான்... நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .? உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்......... விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்......... பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்.......... அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்....... மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான் திருமணத்தை பதிவு செய்தார்கள்.....

கஜா - கவிதை

___ கஜா ___ சீற்றம் குறைகிறது மாற்றம் தெரிகிறது வேண்டும் என்கிறது மழலை குரல் வேண்டாம் என்கிறது அனுபவ குரல் இது காற்று நடத்தும் மாநாடு நடுங்கி நிற்கிறது குடிசை வீடு நிறைவேற போவது என்ன தீர்மானமோ ? பூமிக்கு வரப் போவது அழிமானமோ ? நீ தென்றலாய் வந்தாய் ரசித்தோம் புயலாய் வருகிறாய் ஒரு நிமிடம் திகைத்தோம் உன் வேகத்தை கொஞ்சம் குறை துணைக்கு மேகத்தை கொஞ்சம் அழை உன் போர் குணம் பார்த்து நாங்கள் அழும் முன் வானம் அழட்டும் பூமி உன்னை தொழட்டும் கஜாவே சீற்றம் ஒழி களங்கம் அழி வா மழையாக மலர் தூவி வரவேற்போம் உன்னை நீ தான் காக்க வேண்டும் இந்த மண்ணை