Skip to main content

தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க....!


அமெரிக்காவில்   மிகப்பெரிய பணக்காரர் அவர்..... 


தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ...

ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார்.


பிரபலமான பூக்கடை அது, “எவ்வளவு விலை சார் இது


“250 டாலர!!


இதைவிட அருமையான `பூ` காண்பிக்க முடியுமா?


வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது....


இதுஆர்கிட்வகைப்  பூ... மிகஅருமையா இருக்கும்.... ஒரு வாரம் வரை வாடாது “500 டாலர்”!!


சரி, இதையே, பேக் செய்யுங்க...


உங்களிடம், “கொரியர்சர்வீஸ்  இருக்கா?


கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...அதற்கு ஒரு 100 டாலராகும்.


"வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும்


இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ் பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்….!!!ஒன்று செய்யுங்க..... ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...இந்த பூங்கொத்தை, இன்றே என் தாயிடம் ,இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.


ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர்.


"நோ ப்ராப்ளம்.” பணத்தையும், அம்மாவின் வீட்டு அட்ரெஸ்ஸையும் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். 


மனம் முழுக்க மகிழ்ச்சி தன் பிஸி நேரத்திலும்,  தன் அம்மாவின் பிறந்தநாளை  மறக்காமல் பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக..... ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்....."


குழந்தை ஏன் அழறே?


"அங்கிள், எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா?”


“ஓகே, ஒரு டாலர் தானே தரேன்


எதற்குப் பணம்?”


“ஏன் அழுகிறாய்?”


 ஏதாவது தொலைத்து விட்டாயா?”


நோ அங்கிள்எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று…”


நான் வருடா,வருடம்  அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் இன்று அம்மாவின் பிறந்தநாள்... என்னிடம் பணம் இல்லை...


நீங்க  ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட்டிங்...


ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?


பாவம் ஏழை பெண் அவள்…” ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...


வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்….” என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தாள் அச் சிறுமி.


ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம்நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.


ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்ககடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார். மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி பூ வை  எடுத்தபடி ஓடஅச்சிறுமி எங்கு போகிறாள்?... 


எந்த வீடு? தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின்  பின்னால் போக சொல்லுகிறார்.


சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..


பல வளைவுகளை, தெருக்களை கடந்து ஓடும் அவள்போய் நிற்கும் இடம்  சமாதி... ஒரு கல்லறையின் அருகில்  போய் நின்று, ரோஜா பூவை  வைத்து… “அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கிமுத்தமிடபார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .


சார் , மீட்டிங்கிற்கு, நேரமாச்சு...டிரைவர் அவசரப்படுத்த


கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை எடுத்துக்கொண்டு வண்டியை வீட்டிற்கு போக சொன்னார்.


பெரிய கார், தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த ..... 92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி 


யாரது? என பார்க்க...


அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து....


“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா” என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்


உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!!”


அம்மாஅன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.”


"உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து 

அன்பை வெளிப்படுத்தினாள்நெகிழ்ந்து விட்டேன்... 


ஆனால் நான்?... 


அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன் "உயிரோடு இருக்கும்,  என் தாய்க்கு நேரில் வந்து பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?...


மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.


தாய், தந்தை இருப்பவர்கள்அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்....


அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள். உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து, மகிழ்ந்துஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்உங்கள் வாழ்க்கை சிறக்கும்எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம்.


"சந்தோஷத்தில்மகிழ்ச்சியில், எல்லாத் தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்…”

Comments

Popular posts from this blog

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂
காதலித்து வந்தனர்


ஒரு நாள்
இருவரும்
திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்

பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே
என்ன செய்வது
என்று சொன்னாள்

அதற்கு அந்த பையன் சொன்னான்...

நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?
உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்

பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு

தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........


பெண்ணின் அப்பா சொன்னார்
என்னிடம்
1000 ருபாய் மட்டுமே உள்ளது


திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்

அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......


மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு
சென்றார்கள்


பையன்
மாமனாரிடம் சொன்னான்
நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்

திருமணத்தை பதிவு செய்தார்கள்.......
எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்

திருமண வாழ்க்கை ஆரம்பித…

கஜா - கவிதை

___
கஜா
___

சீற்றம்
குறைகிறது

மாற்றம்
தெரிகிறது

வேண்டும்
என்கிறது
மழலை
குரல்

வேண்டாம்
என்கிறது
அனுபவ
குரல்

இது
காற்று
நடத்தும்
மாநாடு

நடுங்கி
நிற்கிறது
குடிசை
வீடு

நிறைவேற
போவது
என்ன
தீர்மானமோ ?

பூமிக்கு
வரப்
போவது
அழிமானமோ ?

நீ
தென்றலாய்
வந்தாய்
ரசித்தோம்

புயலாய்
வருகிறாய்
ஒரு நிமிடம்
திகைத்தோம்

உன்
வேகத்தை
கொஞ்சம்
குறை

துணைக்கு
மேகத்தை
கொஞ்சம்
அழை

உன்
போர்
குணம்
பார்த்து

நாங்கள்
அழும்
முன்

வானம்
அழட்டும்

பூமி
உன்னை
தொழட்டும்

கஜாவே
சீற்றம்
ஒழி

களங்கம்
அழி

வா
மழையாக

மலர்
தூவி
வரவேற்போம்
உன்னை

நீ
தான்
காக்க
வேண்டும்
இந்த
மண்ணை

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை:

ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது.

ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ என்று…