தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை:

ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது.

ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ என்று யோசித்த தேள்... ஆமையைப் பார்த்து ‘’ஆமை அண்ணே... உனக்கு வலி என்பதே என்னவென்றே தெரியாது போலிருக்கே...’’ என்றது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஆமை,தேளைப் பார்த்துசொன்னது: என்னோட முதுகு கடினமான ஓட்டினால் ஆனது. அதனால எனக்கு வலியே தெரியாது. ஆனா, என்னோட கழுத்துப் பக்கத்துல மென்மையா இருக்கும் . அங்கேதான் வலியோ, காயமோ வரும்’’ என்றது.

'அப்படியா சங்கதி...' என்று தனக்குள்ளேயே சிரித்துக்கொண்ட தேள்... மில்லி மீட்டர் மில்லி மீட்டராக முன்னேறிச் சென்று... ஆமையின் கழுத்துப் பகுதியை அடைந்து... தன் கொடுக்கால் கொட்ட முயற்சித்தது. தன்னுடைய கழுத்துப் பகுதியில் திடீரென்று என்னமோ குத்தியது மாதிரி இருப்பதை உணர்ந்த ஆமை, வெடுக் என்று தனது தலைப் பகுதியை முதுகு ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

அப்புறமென்ன... நயவஞ்சக தேள் நீரோடையில் விழுந்தது. அதன் உயிர் போயே... போயிந்து!

Comments

Popular Posts