Skip to main content

நல்லவையே படிப்போம்.. நல்லவையே பரப்புவோம்..

ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கியிருந்தார்.. அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்..
பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம் நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன்.. என்று சொன்னார்..

அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக்கொன்றார்.. தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னார்..

அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம்.. எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் என்று கூறினார்..

அதனைக் கேட்ட அத்தோழி எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார்.. என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்..

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி.. மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர.. உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்.. என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்..

அதைக்கேட்ட விவசாயி தான் இரண்டை  மூன்றாக்கியது.. இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான்.. ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெறுமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை..
தன் வீரம் பற்றி, புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும்?  என்று அலட்சியமாக கேட்டான்..

உடனே, ஞானி விவசாயின் ஐந்து வயது மகனை அழைத்தார்.. உன் அப்பா.. முப்பதடி பாம்பை கொன்றாரா? என்று கேட்டார்..

ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்து விட்டு.. செத்த பாம்பு, வளருமா? என்று கேட்டான்..

அதை கேட்டு ஞானி பெரிதாக சிரித்தார்

தனது தந்தையார், பாம்பை கொன்றதாக சொன்னபோது ஓடிப்போய் பார்த்திருக்கிறான்.. அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது..
அந்தப் பையனைப் போல, எல்லோரும் உண்மையை ஆராய்ந்ருந்தால்.. வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா..? என்று அவர் ஊர் மக்களை பார்த்து கேட்டார்..

மக்கள் அனைவரும் தலைகுனிந்து கொண்டனர்..
🐝

👇
 இன்று ஊரும் செய்திகளும் அப்படித்தான் உலா வருகிறது..

ஈரை பேனாக்கி..
பேனை பெருச்சாளியாக்கும் உலகமிது..

ஆகையால்.. எதையும் ஆராயாமல் பரப்ப வேண்டாம்..

நல்லவையே படிப்போம்..
நல்லவையே பரப்புவோம்..

Comments

Popular posts from this blog

கஜா - கவிதை

___
கஜா
___

சீற்றம்
குறைகிறது

மாற்றம்
தெரிகிறது

வேண்டும்
என்கிறது
மழலை
குரல்

வேண்டாம்
என்கிறது
அனுபவ
குரல்

இது
காற்று
நடத்தும்
மாநாடு

நடுங்கி
நிற்கிறது
குடிசை
வீடு

நிறைவேற
போவது
என்ன
தீர்மானமோ ?

பூமிக்கு
வரப்
போவது
அழிமானமோ ?

நீ
தென்றலாய்
வந்தாய்
ரசித்தோம்

புயலாய்
வருகிறாய்
ஒரு நிமிடம்
திகைத்தோம்

உன்
வேகத்தை
கொஞ்சம்
குறை

துணைக்கு
மேகத்தை
கொஞ்சம்
அழை

உன்
போர்
குணம்
பார்த்து

நாங்கள்
அழும்
முன்

வானம்
அழட்டும்

பூமி
உன்னை
தொழட்டும்

கஜாவே
சீற்றம்
ஒழி

களங்கம்
அழி

வா
மழையாக

மலர்
தூவி
வரவேற்போம்
உன்னை

நீ
தான்
காக்க
வேண்டும்
இந்த
மண்ணை

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂
காதலித்து வந்தனர்


ஒரு நாள்
இருவரும்
திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்

பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே
என்ன செய்வது
என்று சொன்னாள்

அதற்கு அந்த பையன் சொன்னான்...

நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?
உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்

பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு

தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........


பெண்ணின் அப்பா சொன்னார்
என்னிடம்
1000 ருபாய் மட்டுமே உள்ளது


திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்

அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......


மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு
சென்றார்கள்


பையன்
மாமனாரிடம் சொன்னான்
நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்

திருமணத்தை பதிவு செய்தார்கள்.......
எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்

திருமண வாழ்க்கை ஆரம்பித…

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை:

ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது.

ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ என்று…