ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கியிருந்தார்.. அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்.. பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம் நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன்.. என்று சொன்னார்.. அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக்கொன்றார்.. தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னார்.. அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம்.. எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் என்று கூறினார்.. அதனைக் கேட்ட அத்தோழி எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார்.. என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி.. மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர.. உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்.. என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.. அதைக்கேட்ட விவசாயி தான் இரண்டை மூன்றாக்கியது.. இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான்.. ஆனாலும், முப்பதடி பாம்பைக
Fictos app, tamil short stories to share in Whatsapp