கண்ணீரின் கதை

#கண்ணீரின் கதை

நாம் சிரிக்கும்போது எவ்வளவு கலோரிகள் செலவு செய்யப்படுகின்றனவோ அதே அளவு கலோரிகள் நாம் அழும்போதும் நம் உடலிலிருந்து செலவு செய்யப்படுகின்றன.

அழுகையை அடக்குவதால் ஹார்மோன் பிரச்ச்னைகள் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நம் கண்ணீர் பார்ப்பதற்கு(!) ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் 3 வகைகள் இருக்கின்றன.

*Basal tears – அடிப்படை கண்ணீர்
நம் கண்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகிறது.

*Reflexive tears –
எதிர்வினைக் கண்ணீர்
கண்களில் தூசு விழும்போது, வெங்காயம் நறுக்கும்போது, இருமும்போதும், தும்மும்போதும் வரும் கண்ணீர்.

*Psych tears –
உணர்வுசார் கண்ணீர்
பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே.. கோபம், மன அழுத்தம், பயம், துக்கம் இவை மட்டுமல்ல..அளவுகடந்த சந்தோஷத்தாலும் வரும் கண்ணீர்.

இந்த வகைக் கண்ணீர், மன அழுத்தத்தாலும் கவலையினாலும் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

அழுதுமுடித்தவுடன் புத்துணர்ச்சியுடனும் லேசான மனதுடனும் இருக்க இதுவே காரணம்.

Comments

Popular Posts