Skip to main content

வைரமும் எலியும்
எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..
அதை கண்ட வியாபாரி..
மிகவும் கவலை கொண்டான்..
மிக விலை உயர்ந்த வைரம்..
எப்படியாவது அதனை எடுத்து விடவேண்டும்..
என்று
எலி பிடிப்பவனை நாடினார்..

வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை பிடித்து வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

எலி பிடிப்பவனும் தன் வலையுடன் வந்துவிட்டான்..

எலி அங்கே இங்கே என்று ஓடி போக்கு காட்டியது..

திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் அங்கு ஒன்று கூடிவிட்டன..

எலி பிடிப்பவன் சற்று நேரம் குழம்பிவிட்டான்..

சிறிது நேரத்தில்..
ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும்.. ஒரு எலி மட்டும் அந்த கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது..

எலி பிடிப்பவன் சிந்தித்தான்.. அதுவே அவனுக்கு வசதியாக போய் விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த ஒரு எலியை மட்டும் நோக்கி  வலையை வீசினான்..

எலி பிடிபட்டது..

வைர வியாபாரி அந்த எலியின் வயிற்றை சோதித்து பார்த்தார்..
அதில் வைரம் இருப்பது உறுதியானது.. பின்னர் அதன் வயிற்றை கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டார்..

எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி மகிழ்ச்சி.. ஆனால் ஒரு சந்தேகம்..
ஆமா..! நீ எப்படி அந்த எலிதான் வைரம் விழுங்கிய எலியென்று சரியாக அடையாளம் கண்டு அதை பிடித்தாய்..? என்றார்..

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
ஒரு எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! அப்போதே புரிந்தது..
வைரம் வயிற்றில் இருந்தால்..
கர்வம் தலைக்கு போய்விடும்.. என்று..
இப்படித்தான்..
பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,
தூரத்தில் வைத்துக் கொள்வார்கள் அதுவே..
ஆபத்து நேரத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது என்றான்..
🐝

👇
அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்து போகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிடுகிறார்கள்..

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும், நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்..

Comments

Popular posts from this blog

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼 ஒரு பையனும்🙋🏻‍♂ காதலித்து வந்தனர் ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றி. பேசினர் பெண் சொன்னாள் நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள் அதற்கு அந்த பையன் சொன்னான்... நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .? உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்......... விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்......... பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்.......... அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்....... மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான் திருமணத்தை பதிவு செய்தார்கள்.....

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை: ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ எ

ரா(ம்மீ)ரா. - 96 Movie second part(2)

“ இப்படியும் கூட இருக்கலாம் “ அன்புள்ள ஜானுவுக்கு, கொள்ளிடம் பாலத்தில வேலைன்னு அன்னைக்கு ராத்திரி பாதையை மாத்தி விட்டவங்களுக்கு நன்றி சொல்லி இந்த கடிதத்த ஆரம்ப ிக்கிறேன். அன்னைக்கு அவுங்க அப்படி செய்யலைன்னா நான் கார்ல என்னுடைய ராமை தஞ்சாவூர் அழைச்சி வந்திருக்கமாட்டேன். வந்தததுனால தான் ராம் அன்னைக்கு பள்ளிகூடம் போனான். பழைய ஞாபகத்துல எல்லாருக்கும் போன் செஞ்சதுனால மீண்டும் உங்களை சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சது. காலத்தால தவறிய உங்க காதலை திரும்பவும் காலமே மீட்டுக் கொடுத்தது. உங்க ரெண்டு பேரையும் அன்னைக்கு ஹோட்டல்ல சந்திச்சப்ப ரெண்டு பேர் முகத்துலயும் ஒரு ஏக்கம் தெரிஞ்சது. உங்க கைய நான் புடிச்சி பேசுறப்போ ஒரு சூடு ஒரு படபடப்பு என்னோட ராம் கைய புடிக்கிறப்போவோம் அதே சூடு அதே படபடப்பு இருந்துச்சு. பெர்த் டே ன்னு ஹோட்டல் வந்த நாங்க எல்லாருமே உங்க ரெண்டு பேரையும் பார்த்த அப்புறம் இப்படி ஒரு லவ் எங்களுக்கும் அமையனும்னு பேசிகிட்டே போனோம். அன்னைக்கு என்னமோ ராமைப் பத்தி ரொம்ப யோசிச்சிட்டே இருந்தேன். முன்ன விட முடி எல்லாம் வெட்டி ரொம்ப அழகா வேற இருந்தான். நீங்க ஊருக்கு போனதுக்கு அப்