ராமு, சோமு செவிட்டு சகோதரர்கள்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ராமு, சோமு என்ற இரு சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர்..

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாய் கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் ராமு..

அது பொய், அவருக்கு பாம்புச் செவி.. நன்றாகவே கேட்கும்..

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேடிப்பிடித்து ஒரு துணியை எடுத்து அதன் விலையை ராமிடம் கேட்பர்..

கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் சோமுவிடம் ‘இந்த துணி என்னப்பா விலை’ என்று கத்துவார் ராமு..

சோமு அங்கிருந்து ‘எண்பது ரூபாய்’ என்பார்..

ராமு உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார்..

‘எண்பது ரூபாய்..டா செவிட்டு முண்டமே’- என்று சோமு பதிலுக்கு கத்துவார்..

ராமு வாடிக்கையாளரிடம் திரும்பி ‘ஐம்பது ரூபாய்’ என்பார்..

வாடிக்கையாளர்களும் ராமுவின் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு வெளியேருவர்..

(அந்த துணியின் உண்மையான மதிப்பு முப்பது ரூபாய் தான்!)

எண்பது ரூபாய் என்று கேட்ட மனதிற்கு ஐம்பது ரூபாய் என்பது மகா சின்னதாய் தெரிகிறது.. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது..
🐝

👇
அதேபோல்..

தோல்வியடையும் போது.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்றும்..

வெற்றியடையும் போது.. தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்றும்..

கிடைத்ததை விட பெரியது ஒன்று இருப்பதை எண்ணி இருந்து விடவேண்டும்..

Comments

Popular Posts