Skip to main content

பறவையின் சிறகு

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

அற்புதமான வண்ணங்களில் அறிய சிறகுகள் கொண்ட அழகான சிறுகுருவிக்கு ஒரு கனவு வந்தது..
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது..

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை..
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது..
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்..
அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது..

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை..

அது பறந்து போகும் போது ஒரு காகத்தை பார்த்தது..

காகத்திடம் குருவி வழி கேட்டது..

“எனக்கு முழு விபரம் தெரியாது.. தெரிந்த வரை சொல்கிறேன்..
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் உள்ள அழகான இறகு ஒன்றைத் தர வேண்டும்” என்றது காகம்..

ஒரேயோரு இறகுதானே என்று குருவியும் சரி என்றது..
குருவி காகம் சொன்ன வழியில் பறந்து சென்றது..

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு கிளி வந்தது.. கிளியிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது..

கிளி “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.. சொல்கிறேன்..
பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.. உன் அழகான இறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு இறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது..

கிளி சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை..

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே வந்த பறவைகளிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது..

அவைகளும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு இறகை விலையாக பெற்றன..

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு இறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது..

முடிவாக, அதோ.. கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது..

வந்து விட்டோம்.. வந்தே விட்டோம்.. இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்..

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை..

ஆனால்,
இதென்ன..
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே..
காற்றில் பறக்கவே முடியவில்லையே. என்று கதறியது..

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது..
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

இதோ கண் முன்னே.. தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்..

ஆனால்
அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்..
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது.. அந்தக் குருவி..
🐝

👇
இன்று நம்மில் பலர்.. நாளைய மாய உலகின் வசதிகளைப் எண்ணி இன்றைய எல்லா மகிழ்ச்சியையும் இழக்கிறோம்..

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது.. நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது..

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை..
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது..
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்..
🐝

Comments

Popular posts from this blog

கஜா - கவிதை

___
கஜா
___

சீற்றம்
குறைகிறது

மாற்றம்
தெரிகிறது

வேண்டும்
என்கிறது
மழலை
குரல்

வேண்டாம்
என்கிறது
அனுபவ
குரல்

இது
காற்று
நடத்தும்
மாநாடு

நடுங்கி
நிற்கிறது
குடிசை
வீடு

நிறைவேற
போவது
என்ன
தீர்மானமோ ?

பூமிக்கு
வரப்
போவது
அழிமானமோ ?

நீ
தென்றலாய்
வந்தாய்
ரசித்தோம்

புயலாய்
வருகிறாய்
ஒரு நிமிடம்
திகைத்தோம்

உன்
வேகத்தை
கொஞ்சம்
குறை

துணைக்கு
மேகத்தை
கொஞ்சம்
அழை

உன்
போர்
குணம்
பார்த்து

நாங்கள்
அழும்
முன்

வானம்
அழட்டும்

பூமி
உன்னை
தொழட்டும்

கஜாவே
சீற்றம்
ஒழி

களங்கம்
அழி

வா
மழையாக

மலர்
தூவி
வரவேற்போம்
உன்னை

நீ
தான்
காக்க
வேண்டும்
இந்த
மண்ணை

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂
காதலித்து வந்தனர்


ஒரு நாள்
இருவரும்
திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்

பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே
என்ன செய்வது
என்று சொன்னாள்

அதற்கு அந்த பையன் சொன்னான்...

நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?
உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்

பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு

தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........


பெண்ணின் அப்பா சொன்னார்
என்னிடம்
1000 ருபாய் மட்டுமே உள்ளது


திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்

அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......


மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு
சென்றார்கள்


பையன்
மாமனாரிடம் சொன்னான்
நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்

திருமணத்தை பதிவு செய்தார்கள்.......
எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்

திருமண வாழ்க்கை ஆரம்பித…

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை:

ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது.

ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ என்று…