Skip to main content

ஏளனமாக பார்ப்பதும்.. பேசுவதும் தவறு..!!

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு முதியவர் ஒருவர்.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..

வெயிலில் வந்த களைப்பு..
அவர் முகத்தில் தெரிந்தது..
அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை..
அழைத்து கேட்டார்..

"தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை.." என்று..

அதற்கு சர்வர்
"50 ரூபாய்" என்றார்..

பெரியவர் தனது சட்டை பைக்குள்..
கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?

சர்வர் கோபமாக "யோவ்.. ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க..
இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்று..

பெரியவர் சொன்னார்..
"தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்..
வெளியே வெயில் வேறு.. அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்.." என்றார்..

சர்வர்.. "சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..!" என்று..

பெரியவர்.. "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது.." என்றார்..

சர்வர்.. "சரி.. தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..?"

பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..!

சாப்பாடு வந்தது..

பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் கொடுத்தார்..

சர்வர் மேலும் கோபம் ஆகி..

"யோவ் இந்தாதானேயா..
50 ரூபாய் வச்சுயிருக்க..!
45 ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..?
ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்.." என்று மீதியை கொடுக்க..

பெரியவர் சொன்னார்.. "வேண்டாம் தம்பி அது உனக்குத் தான்.. உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை.." என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்..

சர்வருக்கு கண்களில் நீர்.. ததும்பியது..

👇
யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்.. என்று நமக்கு தெரியாது..!
யாரையும் ஏளனமாக பார்ப்பதும்.. பேசுவதும் தவறு..!!

🐝

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை

Comments

Popular posts from this blog

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂
காதலித்து வந்தனர்


ஒரு நாள்
இருவரும்
திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்

பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே
என்ன செய்வது
என்று சொன்னாள்

அதற்கு அந்த பையன் சொன்னான்...

நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?
உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்

பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு

தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........


பெண்ணின் அப்பா சொன்னார்
என்னிடம்
1000 ருபாய் மட்டுமே உள்ளது


திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்

அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......


மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு
சென்றார்கள்


பையன்
மாமனாரிடம் சொன்னான்
நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்

திருமணத்தை பதிவு செய்தார்கள்.......
எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்

திருமண வாழ்க்கை ஆரம்பித…

கஜா - கவிதை

___
கஜா
___

சீற்றம்
குறைகிறது

மாற்றம்
தெரிகிறது

வேண்டும்
என்கிறது
மழலை
குரல்

வேண்டாம்
என்கிறது
அனுபவ
குரல்

இது
காற்று
நடத்தும்
மாநாடு

நடுங்கி
நிற்கிறது
குடிசை
வீடு

நிறைவேற
போவது
என்ன
தீர்மானமோ ?

பூமிக்கு
வரப்
போவது
அழிமானமோ ?

நீ
தென்றலாய்
வந்தாய்
ரசித்தோம்

புயலாய்
வருகிறாய்
ஒரு நிமிடம்
திகைத்தோம்

உன்
வேகத்தை
கொஞ்சம்
குறை

துணைக்கு
மேகத்தை
கொஞ்சம்
அழை

உன்
போர்
குணம்
பார்த்து

நாங்கள்
அழும்
முன்

வானம்
அழட்டும்

பூமி
உன்னை
தொழட்டும்

கஜாவே
சீற்றம்
ஒழி

களங்கம்
அழி

வா
மழையாக

மலர்
தூவி
வரவேற்போம்
உன்னை

நீ
தான்
காக்க
வேண்டும்
இந்த
மண்ணை

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை:

ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது.

ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ என்று…