Skip to main content

Featured

எதுவும் என்னுடையது அல்ல

"'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"  என்றான் ஒரு அரசன்,  ஞானியிடம்.
"உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?" என்று ஞானி கேட்டார்.
என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. 
கள்வர் பயம் இல்லை. 
அதிக வரிகள் விதிப்பதில்லை. 
முறையாக நீதி செலுத்தப்படுகிறது. 
நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். 
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. 
இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.
'அப்படியானால் ஒன்று செய். 
உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.
'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.
'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.
'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.
'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். 
உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. 
அதையே செய். 
என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. 
நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். 
சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். 
அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். 
அவரை வரவேற்…

இரண்டு புதிய மாடுகள்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு ஏழை மனிதன் இருந்தான்.
அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன.

அதில் கிடைக்கும் பாலில் தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர்.

அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் "இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.

அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.

எப்படி நடந்தது என்று தெரியாதபடி வருமானம் பெருகியது.
இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.

சிறிய கூரை வீடு பெரிய காரை வீடானது.

திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு.
நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின.. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.
தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவன் அவரைத் தேடி வருவானென்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.
மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம். இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.

அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.

அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.

ஞானிக்கு வந்தது கோபம் காசு பணம் வந்ததும் பழசையெல்லாம் மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே! இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.
பழைய படி ரெண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும்"! சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடிவந்தான்.

அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை.

அவரைத் தேடி ஓடினான்.

ஆனால் அவர் எங்கு  தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான்.
கொல்லைப் புறத்தில் அவர் சபித்தபடியே இரண்டே மாடுகள்.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் .

"என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழையபடி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.

அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க."

அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய? இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே" என்றான்.

மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். "சரி போ. நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்.

நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.
மனது கணக்க, கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான்.

அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.

குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அவளாகவே சொன்னாள்.

"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க"

பார்த்தான்.
அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள். கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.
மனைவி சொன்னாள், "எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?

அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? "
அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.

அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். முன்பை விடப் பெரிய பணக்காரனானான்.

👇
ஒருவர் நம்மை இகழ்ந்தாலும்..
அதை சவாலாக ஏற்று..
அதில் உள்ள சாதகங்களை நமக்கு பயணளிக்குமாறு செய்து முன்னேறுவதே புத்திசாலித்தனம்..

வாழ்க்கை வாழ்வதற்கே..

🐝

பிடித்தால் பகிருங்கள்..

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை

Comments

Popular Posts