Skip to main content
தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..


பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது,

தன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமாக இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்..

அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியது தானே? என்றார்.

ஷா, "தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை" என்றார்.

சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார்.

மாடியில் தங்கியிருந்த ஷா வைப் பார்க்க படியேறிவந்தார்.

ஷா வைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார்.

அதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.

டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.

ஷா, சிரித்துக் கொண்டே
டாக்டரைப் பார்த்து, என்னப்பா டாக்டர் இது? எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே? எனக்கேட்டார்.

அதற்கு டாக்டர் உங்களுக்கு பார்த்த வைத்தியதிற்குத் தாங்க இந்த ஃபீஸ் என்றார்.

மீண்டும் டாக்டர் சொன்னார்..
போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்..
"எழுந்து நடக்க முடியவில்லை" என்றீர்கள். இப்போ ஓடோடிவந்தீர்கள்.
"உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை" என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க.
"தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு" சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்..

அப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் அதனால் அவை பெரிதாக தெரிந்தன.

இப்போ எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது என்றார்.

நம்முடைய கவலைகளையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவை பூதாகரமாகத்தான் தெரியும்.
பிறரின் கவலைகளையும் நினைத்துப் பாருங்கள்..
அவற்றின் முன்பு நம்முடைய கவலைகள் புஸ்வானமாகிப் போகும்..

கவலைகள் மறப்போம்..
சிறகுகள் விரிப்போம்!

🐝

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை

Comments

Popular posts from this blog

தேளும் ஆமையும்

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை: ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது. ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ எ

ஒரு பெண்ணும் ஒரு பையனும்

ஒரு பெண்ணும் 🙎🏼 ஒரு பையனும்🙋🏻‍♂ காதலித்து வந்தனர் ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றி. பேசினர் பெண் சொன்னாள் நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள் அதற்கு அந்த பையன் சொன்னான்... நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .? உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்......... விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்......... பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்.......... அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்....... மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான் திருமணத்தை பதிவு செய்தார்கள்.....

கஜா - கவிதை

___ கஜா ___ சீற்றம் குறைகிறது மாற்றம் தெரிகிறது வேண்டும் என்கிறது மழலை குரல் வேண்டாம் என்கிறது அனுபவ குரல் இது காற்று நடத்தும் மாநாடு நடுங்கி நிற்கிறது குடிசை வீடு நிறைவேற போவது என்ன தீர்மானமோ ? பூமிக்கு வரப் போவது அழிமானமோ ? நீ தென்றலாய் வந்தாய் ரசித்தோம் புயலாய் வருகிறாய் ஒரு நிமிடம் திகைத்தோம் உன் வேகத்தை கொஞ்சம் குறை துணைக்கு மேகத்தை கொஞ்சம் அழை உன் போர் குணம் பார்த்து நாங்கள் அழும் முன் வானம் அழட்டும் பூமி உன்னை தொழட்டும் கஜாவே சீற்றம் ஒழி களங்கம் அழி வா மழையாக மலர் தூவி வரவேற்போம் உன்னை நீ தான் காக்க வேண்டும் இந்த மண்ணை