Skip to main content

Posts

Showing posts from October, 2018
தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..


பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது,

தன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமாக இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்..

அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியது தானே? என்றார்.

ஷா, "தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை" என்றார்.

சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார்.

மாடியில் தங்கியிருந்த ஷா வைப் பார்க்க படியேறிவந்தார்.

ஷா வைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார்.

அதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.

டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.

ஷா, சிர…

100 பத்துரூபாய்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒருவர் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்கிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்.
(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்..)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து.. ஒரே ஒரு பத்துரூபாய் நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்தது பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு கிடந்த வழியில் ஒருவன் வருகிறான்.

இந்த நோட்டைக் கண்டு 'இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து மிகவும் சந்தோஷமடைகிறான்

அந்த பத்து ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.

இரண்டு இட்லி - ஒரு காபி ஒன்பது ரூபாய்க்கு (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயை போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய் நோட்டுகள் கொ…

அன்பினால் சிறுவனும் பசுவும்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

 அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.

அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது.

பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.

அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்..

தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார்.
பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை.

அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.

நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.

மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.

ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்.

மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு…

எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான்  உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும்
தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ,
அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ மனநிம்மதி, மன நிறைவு…

நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்..

அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்

அதில் வெற்றி பெற்றால்,
நீ தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகிவிடுவாய்..

இன்று இரவு முழுவதும்.. நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும்..

உன் கண்கள் கட்டப்படும்..

ஆனாலும் நீ பயப்படக்கூடாது..

வீட்டிற்கு ஓடி வந்து விடவும் கூடாது என்றார்..

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்..

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்..

பிறகு,
தந்தை திரும்பிச்செல்லும்  காலடி ஓசை, மெல்ல, மெல்ல மறைந்தது..

அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு..

தூரத்தில் ஆந்தை கத்துவதும்,

நரி ஊளையிடுவதும்,

நடுக்கத்தைக் கொடுத்தது..

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ,
என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது..

மரங்கள் பேயாட்டம் ஆடின..

மழை வேறு தூறத் தொடங்கியது..

கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது..

‘’அய்யோ ! இப்படி அனாதையாக தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே.."

"யாரா…

அப்பா எழுதுவது

#படித்ததில்மனதைத்தொட்ட_பதிவு ...

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும்…

ஏளனமாக பார்ப்பதும்.. பேசுவதும் தவறு..!!

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு முதியவர் ஒருவர்.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..

வெயிலில் வந்த களைப்பு..
அவர் முகத்தில் தெரிந்தது..
அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை..
அழைத்து கேட்டார்..

"தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை.." என்று..

அதற்கு சர்வர்
"50 ரூபாய்" என்றார்..

பெரியவர் தனது சட்டை பைக்குள்..
கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?

சர்வர் கோபமாக "யோவ்.. ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க..
இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்று..

பெரியவர் சொன்னார்..
"தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்..
வெளியே வெயில் வேறு.. அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்.." என்றார்..

சர்வர்.. "சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..!" என்று..

பெரியவர்.. "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது.." என்றார்..

சர்வர்.. "சரி.. தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..?"

பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..!

சாப்பா…

இரண்டு புதிய மாடுகள்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு ஏழை மனிதன் இருந்தான்.
அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன.

அதில் கிடைக்கும் பாலில் தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர்.

அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் "இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.

அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.

எப்படி நடந்தது என்று தெரியாதபடி வருமானம் பெருகியது.
இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.

சிறிய கூரை வீடு பெரிய காரை வீடானது.

திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு.
நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின.. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.
தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவன் அவரைத் தேடி வருவானென்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.
மனதில் அவருக்…

ராமசாமி தோட்டத்தில் முருங்கை

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு..

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே..

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்..

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!

ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை..

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்..

காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது..

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்..

சிறிது நேரத்தில்..
பத்து…

மலை உச்சியில் கடவுள்...

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து…

எறும்பின் தன்னம்பிக்கை

"ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.
அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது.
சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது

"அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையே பாலமாக வைத்து.. முன்னேற வேண்டும்"

மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும்.
🐝

பிடித்தால் பகிருங்கள்..

கல்விமான்கள்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் ஒரு இந்திய ஞானியைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் ஞானியை நோக்கி ஞானி அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன் ? என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.

நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன் ? என்று பதில் கேள்வி கேட்டார் ஞானி..

உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும்.

பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று ஞானி பதில் சொன்னார்.

அந்த விளக்கத்தை…

குருவும் சிசியனும் - பேரிச்சம்பழங்கள்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு சீடன் தனது குருவைப் பார்த்துக்கேட்டான்..
'குருவே.. நான் பேரிச்சம்பழங்கள் சாப்பிட்டால் தவறா?'

'இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம்' என்றார் குரு.

உடனே சீடன் கேட்டான்..
கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே?

அதிலொன்றும் தவறில்லை.. சாப்பிடலாம்.. என்றார் குரு

மறுபடியும் சீடன்
மேலும்.. சிறிது நீர் அருந்தினால் தவறா குருவே? என்றான்..

ஒரு குறையும் இல்லை.. என்றார் குரு..

அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்..
இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது.. அதை மட்டும் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே.. என்றான்.

அதற்கு குரு கேட்டார்..
கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?

வலிக்காது குருவே என்றான்.

மேலும் சிறிது நீரை ஊற்றினால்?
குரு கேட்டார்.

அதுவும் வலிக்காது குருவே என்றான்..!

குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் கலந்து சுட்டு.. செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?

தலை பிளந்துவிடும் குருவே என்றான்..

உன் கேள்விக்கான விடையும் அதுதான்..
என்றார் குரு..

👇
அறிவை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தியவர்கள் சீக்கிரமே வெற்றி…

ஒரு ஞானியும் பூவும்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ஒரு ஞானி இருந்தார்.
அவர் ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர்.

அவர் ஒரு ஊருக்குச் செல்லும்போது, ஒரு ஏழையின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த மனிதன் ஏழையாக இருந்தாலும், அவரை மிகவும் நல்ல முறையில் உபசரித்தான். அவரிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்துகொண்டான். ஆனால், அவன் ஒரு சோம்பேறி.. அவனது பணிவு ஞானியைக் கவர்ந்தது..

அவர், புறப்படும் முன்பு சொன்னார்
"நண்பனே, நீ ஏழையாக இருந்தாலும்..
நீ என்னை நல்ல முறையில் உபசரித்தாய். உனது அன்பும், அடக்கமும் எனக்குப் பிடித்திருக்கிறது..
எனவே, நான் உனக்கு இந்தப் பூவை பரிசளிக்கிறேன்..

இது பார்வைக்கு சாதாரணப் பூவாகத் தெரிந்தாலும், உண்மையில் மந்திர சக்தி வாய்ந்தது.. யாருக்கும் தெரியாமல் இந்தப் பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும்.. ஆனால், இந்தப் பூ இரண்டு நாட்கள் மட்டும்தான் மலர்ச்சியாக இருக்கும்..

அந்த இரண்டு தினங்களுக்குள் நீ உனக்குக் கிடைக்கும் இரும்பை, தங்கமாக்கிக்கொள்ளலாம்.. இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தப் பூ வாடிவிடும். வாடிவிட்டால் அதற்குச் சக்தி இருக்காது.. இதைக் கவனமாக நினைவில் வைத்துக்கொள்..'' எ…

திருவாசகம்

தித்திக்கும் திருவாசகம் எனக்கு எப்படி தித்திதது ? ???

ஒரு பெரியவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு
வாசலில் அமர்ந்தபடி திருவாசத்தை படித்துக்
கொண்டே இருப்பார்.

இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் ,

" தாத்தா!

எப்பப்
பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.

இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?

"என்றான்.

பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்
இருக்கும் ".

"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
மனப்பாடம் ஆயிருக்குமே!

அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க ?"

என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார்,

" எனக்கு ஒரு உதவி செய்.

நீ செஞ்சு
முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".

இளைஞன் கேட்டான்,

" என்ன உதவி தாத்தா? "

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையை
எடுத்தார்.

அதில் அடுப்புக் கரி
இருந்தது.

அதை ஒரு மூலையில்
கொட்டினார்.

பல நாட்களாகக் கரியை
சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.

பெரியவர் சொன்னார்,

" தம்பி,

அதோ இருக்குற பைப்ப…

ராமு, சோமு செவிட்டு சகோதரர்கள்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

ராமு, சோமு என்ற இரு சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர்..

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாய் கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் ராமு..

அது பொய், அவருக்கு பாம்புச் செவி.. நன்றாகவே கேட்கும்..

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேடிப்பிடித்து ஒரு துணியை எடுத்து அதன் விலையை ராமிடம் கேட்பர்..

கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் சோமுவிடம் ‘இந்த துணி என்னப்பா விலை’ என்று கத்துவார் ராமு..

சோமு அங்கிருந்து ‘எண்பது ரூபாய்’ என்பார்..

ராமு உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார்..

‘எண்பது ரூபாய்..டா செவிட்டு முண்டமே’- என்று சோமு பதிலுக்கு கத்துவார்..

ராமு வாடிக்கையாளரிடம் திரும்பி ‘ஐம்பது ரூபாய்’ என்பார்..

வாடிக்கையாளர்களும் ராமுவின் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு வெளியேருவர்..

(அந்த துணியின் உண்மையான மதிப்பு முப்பது ரூபாய் தான்!)

எண்பது ரூபாய் என்று கேட்ட மனதிற்கு ஐம்பது ரூபாய் என்பது மகா சின்னதாய் தெரிகிறது.. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது..
🐝

👇
அதேபோல்..

தோல்வியடையும் போது.. தலைக்கு வ…

திருப்தி அடையுங்கள்

திருப்தி அடையுங்கள் ..


ஒரு மனிதன் ஒவ்வொரு ஆண்டும் தன பிறந்த நாளன்று அந்த வருடம் பாடுபட்டுத் தேடிய பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு குதிரைப் பந்தயத்திற்கு செல்வான்.

மீண்டும் மீண்டும் தோற்றபோதும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் இதைத் தொடர்ந்தான்.

அவனுக்கு ஐம்பது வயது ஆயிற்று.அவன் நினைத்தான்,''ஒன்று பிச்சைக்காரனாக வேண்டும்,அல்லது பேரரசனாக வேண்டும்.நடுநிலை வேண்டாம்,'' என முடிவு செய்து

எனவே தன சொத்து முழுவதையும் விற்று குதிரைப் பந்தயம் சென்றான்.

தோற்றான்.இப்போது அவனிடம் ஒன்றுமில்லை.ஒரு மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள சென்றான்.

அப்போது ஒரு குரல்,''நிறுத்து!அடுத்த முறை உனக்கு நான் வெற்றி தருகிறேன்.''என்றது.நம்பிக்கையுடன் இறங்கி வந்து உழைத்துப் பணம் சேர்த்து குதிரைப் பந்தயம் சென்றான்

.குரல் ஒரு குதிரை பெயரைச் சொல்ல அதன் பேரில் பணம் கட்டினான்.அக்குதிரையும் வெற்றி பெற்று அவன் பெரும் பணம் பெற்றான்.அடுத்த பந்தயம் துவங்க இருக்கும்போது மீண்டும் அக்குரல் ஒரு குதிரையின் பெயரைச் சொல்ல அவன் அதன் மீது பணம் கட்ட, மீண்டும் வெற்றி.

மூன்றாவது பந…

வார்த்தைகளின் சக்தி

வார்த்தைகளின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.  "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என ச…

தலைவனின் யுக்தியும் புத்தியும்

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

கடல் சூழ்ந்த அழகான நாடு ஒன்று இருந்தது..
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன..

அந்தக் நாட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.. அவருக்கு வயதாகிவிட்து..
அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார்..

அங்கு பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது..

கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்..

எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்..

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்..

இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர்..

இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது..

இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி..

தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை..

எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்..
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார்..

"இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்ப…

பறவையின் சிறகு

தேன்கூடு-ன் தினம் ஒரு கதை..

அற்புதமான வண்ணங்களில் அறிய சிறகுகள் கொண்ட அழகான சிறுகுருவிக்கு ஒரு கனவு வந்தது..
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது..

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை..
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது..
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்..
அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது..

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை..

அது பறந்து போகும் போது ஒரு காகத்தை பார்த்தது..

காகத்திடம் குருவி வழி கேட்டது..

“எனக்கு முழு விபரம் தெரியாது.. தெரிந்த வரை சொல்கிறேன்..
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் உள்ள அழகான இறகு ஒன்றைத் தர வேண்டும்” என்றது காகம்..

ஒரேயோரு இறகுதானே என்று குருவியும் சரி என்றது..
குருவி காகம் சொன்ன வழியில் பறந்து சென்றது..

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு கிளி வந்தது.. கிளியிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட…

இது தான் வாழ்க்கை

💫💗எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது...

💗🙏🏻ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்...

💗👌🏻ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்...

💗👍🏻பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்...

💫🙏🏻ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்...

💗👍🏻ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது...

💗🤷🏻‍♂இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...

💶🤦🏻‍♂22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

💶👍🏻ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்...

👌🏻💗எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.
கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை...

🤷🏻‍♂சர்ச்சில் தனது 82 வது வயதில் Hist…

வைரமும் எலியும்

எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..
அதை கண்ட வியாபாரி..
மிகவும் கவலை கொண்டான்..
மிக விலை உயர்ந்த வைரம்..
எப்படியாவது அதனை எடுத்து விடவேண்டும்..
என்று
எலி பிடிப்பவனை நாடினார்..

வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை பிடித்து வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

எலி பிடிப்பவனும் தன் வலையுடன் வந்துவிட்டான்..

எலி அங்கே இங்கே என்று ஓடி போக்கு காட்டியது..

திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் அங்கு ஒன்று கூடிவிட்டன..

எலி பிடிப்பவன் சற்று நேரம் குழம்பிவிட்டான்..

சிறிது நேரத்தில்..
ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும்.. ஒரு எலி மட்டும் அந்த கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது..

எலி பிடிப்பவன் சிந்தித்தான்.. அதுவே அவனுக்கு வசதியாக போய் விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த ஒரு எலியை மட்டும் நோக்கி  வலையை வீசினான்..

எலி பிடிபட்டது..

வைர வியாபாரி அந்த எலியின் வயிற்றை சோதித்து பார்த்தார்..
அதில் வைரம் இருப்பது உறுதியானது.. பின்னர் அதன் வயிற்றை கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டார்..

எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி மகிழ்ச்சி.…

மான் - விதியின் கதை

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்..

அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது..

அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு..

இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது..

அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன..

மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன..

மான் தன் இடப்பக்கம் பார்த்தது..

அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்..

மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது..

ஒரு கருவுற்ற மான்.. பாவம் என்ன செய்யும்?

அதற்கு வலியும் வந்து விட்டது.
மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது..

என்ன நடக்கும்?..

மான் பிழைக்குமா?...

மகவை ஈனுமா ?

மகவும் பிழைக்குமா?...

இல்லை.. காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?..

வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?..

புலியின் பசிக்கு உணவாகுமா?..

பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும்,
 பொங்கும் காட்டாறு மறு புறம்,
பசியோடு புலியும்,
வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்..

மான் என்ன செய்யும்?..

மான் எதை பற்றியும் கவலை படாமல்.. தன் கவனம் முழுவ…